சிறந்த அங்கக விவசாயிக்கான நம்மாழ்வார் விருது.!

70பார்த்தது
சிறந்த அங்கக விவசாயிக்கான நம்மாழ்வார் விருது.!
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வட்டார விவசாயிகளே
2023-24 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் இடுபடும் சிறந்த விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான "நம்மாழ்வார் விருது" வழங்கப்பட்டு வருகிறது. 2024-25ஆம் ஆண்டிலும் உயிர்ம வேளாண்மை விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று 2024-25ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி உயிர்ம வேளாண்மையை சிறப்பான முறையில் ஒவ்வொரு வேளாண் குடும்பங்களுக்கும் எடுத்துச் செல்லும் விவசாயிகளின் அயராத முயற்சிகள் இந்த மண்ணையும், சுற்றுச்சூழலையும் காக்கும் அங்கக விவசாயிகளை ஊக்கப்படுத்தவும். மேலும் உற்சாகத்துடன் செயல்படுவதற்கும். 3 உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி