ராமநாதபுரத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!

181பார்த்தது
ராமநாதபுரத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் 240 மக்களை தேடி மருத்துவ ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி வரன்முறை படுத்த வேண்டும், மாத ஊதியம் ரூபாய் 26000 வழங்க வேண்டும், ஊக்கத்தொகை ரூபாய் 2000 அனைவருக்கும் வழங்க வேண்டும், பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் மாத ஊதியத்தை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக சம்பளத்தை செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக எம். ராஜேஸ்வரி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் எம். சிவாஜி, மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி. லில்லி பாக்கியம், மாவட்ட பொருளாளர் வி ஜாக்ளின், மாவட்டத் துணைத் தலைவர் V. வள்ளி, டி. சின்னபொண்ணு, பரமேஸ்வரி, லயோலா (முதுகுளத்தூர்) ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் கனகவீரலட்சுமி சீதாலட்சுமி [பரமக்குடி] புஷ்பராணி [போகலூர்] கலைப்பிரியா [ஆர்எஸ் மங்கலம். உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் நடத்தும் முதல் ஆர்ப்பாட்டம் இதுவாகும். ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாத ஊதியம் ரூபாய் 26000 வழங்க வேண்டும், மாதா மாதம் ஊழியர்களின் வங்கி கணக்கில் மாத சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உற்சாகமாக கோசங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி