கீழக்கரையில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

76பார்த்தது
கீழக்கரையில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் SWACHHATA HI SEVA - 2024 திட்டத்தின் கீழ் கீழக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நகர் முழுவதும் குவியும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வண்ணம் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது இதில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்து மருத்துவரிடம் ஆலோசனையும் மருந்துகளும் பெற்றுக் கொண்டனர்.

இதில் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபீதா துணைத் தலைவர் ஹமீது சுல்தான் நகராட்சி பொறியாளர் அருள் சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா தூய்மை பணியாளர் மனோகர் உட்பட பல கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி