மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று நேற்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 10 மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் மீன்வளத்துறையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபிக் மீனவர்களை வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.