இராமநாதபுரம் மாவட்டம், ஆர். ஆர் சேதுபதி நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி செய்து வந்த பழனி என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை இராமநாதபுரம் அப்பாஸ் அலி அறக்கட்டளை சேர்மன் அமீர் அம்சா காவல் துறை உதவியோடு உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்