ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட புண்ணிய ஸ்தலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். நாளைய தினம் மகாளய அமாவாசை என்பதால் இன்று மாலை முதலே ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.