ஏப். 24 ல் மதுரை ரயில்வே கோட்ட எம்பிக்கள் ஆலோசனை கூட்டம்
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம், மதுரை ரயில்வே காலனி வைகை ஆபிஸர்ஸ் கிளப்பில் ஏப். 24 காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிகள் ரயில்வே தொடர்பான வளர்ச்சி நடவடிக்கைள், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.