ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் மூன்று நாள் தொடர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் படகு உரிமம், அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை ஒப்படைக்க போவதாக 11 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இலங்கை நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பதாகவும் விரைவில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் உறுதியளித்தார்.
இந்த உறுதியை ஏற்ற மீனவர்கள் தங்களது நடை பயணத்தை ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மீனவர்களை விடுதலை செய்யும் வரை மீனவர் ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.