அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

62பார்த்தது
ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சக்கரக்கோட்டை, குமரய்யா கோவில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பட்டினம் காத்தான், காட்டூரணி மற்றும் பேராவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

காலை முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. பருவ மழையை நம்பி நெல் சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நெற்பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் இன்று பெய்து வரும் மழை நெல் மகசூலுக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி