ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்த முருகனின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில நிர்வாக குழு தலைவர் ஹெச். ராஜா மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்.
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மூன்று கோயில்களில் மூன்று பக்தர்கள் உயிரிழந்துள்ளனர், ஒரு நாளைக்கு ஒரு புனித தளத்தில் உயிர் பலியானது ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலியா பாபு ஆவார், அவர் சினேக் பாபு இல்லை.
சேகர்பாபு, கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பார்கள் இங்கே 6 மணி நேரம் நிற்க மாட்டார்களா என ஆணவத்தில் பேசுகிறார்கள். சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யாமல் இந்து பக்தர்களுக்கு விடிவு கிடையாது. திருச்செந்தூர் கோவிலில் உயிர் இழந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தருவதற்கு கடிதம் எழுதி கையெழுத்து வாங்கி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரக்கக் குணம் கொண்ட மனித பண்பில்லாத ஒரு ஈனப்பிறவி தீய சக்தி சேகர் பாபு என்பது தெரிய வருகிறது. புனித தலங்களில் உயிரிழப்பு ஏற்படுவது எதை காட்டுகிறது என்றால் இந்த ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட உள்ளது என்பதை ஆண்டவன் முடிவு செய்துவிட்டான், என கூறினார்