இராமநாதபுரத்தில் பொதுமக்கள் போது போக்குவதற்கான இடங்கள் பெரிய அளவில் இல்லாததால் பொழுது போக்க சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில் பால்க்கரை அருகே ஐந்திணை பூங்கா ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், அதன் அருகில் மாவட்ட வனத்துறை சார்பில் 'மரகத பூஞ்சோலை' பெயரில் புதிய பூங்கா அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. வனத்துறையின் பல்வேறு நிகழ்வுகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த பூங்கா அமைய உள்ளது.