ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து, உளவுத் துறையினா் தங்கச்சிமடம் அய்யன்தோப்புப் பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டின் அருகே சோதனையிட்டனா். அப்போது, அங்கு 7 சாக்கு மூட்டைகளில் 175 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை உளவுத் துறையினா் பறிமுதல் செய்து, தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம்.
இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனா்