பாம்பன் புதிய ரயில் பாலமானது ரூ. 550 கோடி செலவில் கட்டப்பட்டு இறுதி பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று பல கட்ட சோதனைகள் நடைபெற்று திறப்பு விழாவிற்காக காத்திருக்கின்றது. இதனை இன்று (டிச. 23) மத்திய இரும்பு மற்றும் கனரக எக்கு துறை இணை அமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு செய்தார். செங்குத்து தூக்கு பாலத்தையும் ஏற்றி இறக்கி சோதனை செய்து ஆய்வுகள் மேற்கொண்டார்.