இராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

61பார்த்தது
இராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை இன்று(செப்.30) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு வளாகத்தில் உள்ள இராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடனை, பரமக்குடி (தனி) ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி