இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை இன்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது. அதன்படி இராமேஸ்வரம் தங்குதளத்தில் உள்ள விசைப்படகுகள் தங்குதள வாடகை ரூ. 100ஐ பிரதி மாதம் ஐந்தாம் தேதிக்குள் டோக்கன் அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளுமாறு இராமேஸ்வரம் மீன்வளத்துறை அறிவித்துள்ளது