ஒரு வருடமாக வீடு இல்லாமல் உறவினர் வீட்டிலும் வீதிகளிலும் தஞ்சம் புகும் மாற்றுத்திறனாளி
ராமநாதபுரம் மாவட்டம் வணங்கானேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார் மாற்றுத்திறனாளி ஆனா ராசையா இவரது வீடு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மழையால் முற்றிலுமாக சேதம் அடைந்தது இதனைக் கண்ட மஞ்சூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் அதிகாரிகள் இவரை சந்தித்து உங்களுக்கு வீடு பழுது செய்ய பெயர் வந்துள்ளது என வீட்டின் முன் நிறுத்தி கடந்த வருடம் புகைப்படம் எடுத்ததாக சொல்லப்படும் நிலையில் அது கண்துடைப்பாகவே மாரி விட்டதாக கூறப்படுகிறது மேலும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராசையா வீட்டை சரி செய்வதாக கூறி ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் அதிகாரிகள் பெயர் வந்துள்ளது என தன்னிடம் தெரிவித்து வீட்டின் முன்பு புகைப்படம் எடுத்துச் சென்று தன்னை ஏமாற்றி சதி செய்ததாகவும் இதனால் சேதம் அடைந்த வீட்டில் என்னால் இனி இருக்க முடியாது என உயிருக்கு பயந்து தனது உறவினர் வீடுகளிலும் வீதியிலும் தனது பொழுதை கழித்து வருவதாக வேதனையோடு தெரிவித்தது மட்டுமின்றி தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இதில் உடனடியாக தலையிட்டு தனது வீட்டை சரி செய்ய வேண்டியும் அல்லது புது வீடு ஒன்று அமைத்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளார்