திருப்பரங்குன்றம் செல்ல இருந்த இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இந்து மக்கள் ஜனநாயக பேரவை நிறுவனர் அண்ணாதுரை, இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் துரை உள்ளிட்டவர்கள் திருப்பரங்குன்றத்திற்கு செல்ல இருந்த நிலையில் திருவாடானை காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து தனியார் மஹாலில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அவர்களை பார்வையிட்டு வருகின்றனர்.