ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசன வரிசையில் சென்று கொண்டிருந்த ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்தாஸ் என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார். பக்தரின் இறப்புக்கு நீதி கேட்டு, இந்து முன்னணி சார்பில் காவல்துறையின் தடையை மீறி ராமேஸ்வரம் NSK வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.