நெடுஞ்சாலை தடுப்பு சுவரால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் வரை சாலை நடுவே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர், வாகனங்கள் செல்லும் பகுதியில் இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும், பயணத்தில் தொந்தரவு ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்