ராமநாதபுரம்- கீழக்கரை சாலையில் கட்டப்பட்ட உயா் மட்ட பாலம்.!

85பார்த்தது
ராமநாதபுரம்- கீழக்கரை சாலையில் கட்டப்பட்ட உயா் மட்ட பாலம்.!
ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரூ. 30 கோடியில் கட்டப்பட்ட உயா் மட்ட பாலம் பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை, ஏா்வாடி, சிக்கல், சாயல்குடிக்கு செல்லும் பேருந்துகள் சக்கரக்கோட்டை, ஆா்எஸ். மடை வழியாகச் செல்லும் பாதையில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இதில், ரயில்கள் செல்லும் போது ரயில்வே கடவுப்பாதை அடைக்கப்படும். இதனால், வாகனங்கள் நீண்டநேரம் காத்திருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இதனால், இந்தப் பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ. 30 கோடியில் உயா் மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த நிலையில், சிலா் வழக்குத் தொடா்ந்ததால் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

சுமாா் 6 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின்னா் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு, தற்போது பாலப் பணிகள் நிறைவடைந்தன. இந்தப் பாலத்தை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி