இராமேஸ்வரம் டிஎஸ்பி சாந்தமூர்த்தி உடைமாற்றும் அறையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரகசிய கேமரா வைத்து கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷ் கண்ணா மற்றும் மீரான் மைதீன் ஆகிய இருவரையும் போலீஸ் காவில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் வெளி நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.