உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் மார்ச் 23ல் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நாளை (மார்ச். 29) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீர் தின கருப்பொருள், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, தூய குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்