இராமநாதபுரம் அடுத்த திருஉத்திரகோசமங்கை அருகே ஆலங்குளத்தில் இருந்து இராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் உத்திரகோசமங்கையில் இருந்து முதுகுளத்தூர் சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவர்கள், கட்டட தொழிலாளர்கள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.