சட்டத்துக்கு புறம்பாக கச்சத்தீவு திருப்பயணத்திற்கு மீன்பிடி விசைப்படகில் கட்டணம் வசூழித்து அழைத்துச் செல்வதை அரசு தடை செய்ய வேண்டும்
கச்சத்தீவு திருவிழா வரும் மார்ச் 14, 15 தேதியில் நடைபெறுவதாக உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன.
இந்திய படகு பதிவு சட்டம் 1953, தமிழ்நாடு மீன்பிடிச் சட்டம் 1983 மற்றும் இன்சூரன்ஸ் சட்டம் ஆகியவை படி மீன்பிடி விசைப்படகில் கட்டணம் வசூல் செய்து பயணிகளை அழைத்துச் செல்வது சட்டப்படி குற்றம். இதை மதுரை உயர்நீதிமன்ற கிளை 3258/2018 உறுதிப்படுத்துகிறது.
2.
எனது சட்டத்திற்கு புறம்பாக பணம் * வசூலித்து மீன்பிடி விசைப்படகு திருப்பணிகளை அழைத்துச் செல்வதை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கச்சத்திவு பாரம்பரிய திருப்பயண குழு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது