ராமநாதபுரம் நகராட்சியின் கலவை உரக்கிடங்கில் இருந்த குப்பை தரம் பிரிக்கும் இயந்திரம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீயில் சேதமடைந்து பயன்பாடின்றி இருந்தது. சுகாதார ஆய்வாளர் ஆய்வின்போது இயந்திரம் காணாமல் போனதை கண்டறிந்து, கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஆனந்தன், காளிமுத்து, பாலகிருஷ்ணன், பச்சைமால் ஆகியோரை கைது செய்தனர்