இராமநாதபுரத்தில் கால்நடைகளை தாக்கும் கால்க்காணை மற்றும் வாய்காணை நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்க்காணை மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 6 ஆவது சுற்று 03. 01. 2025 முதல் 31. 01. 2025 வரையிலும் நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர்கள் தங்களது மாட்டினங்களை அவர்களது கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.