இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று (மார்ச். 17) மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு கடந்த ஐந்து நாட்களுக்கு முன் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையின் சார்பில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடை நீங்கியதை அடுத்து இன்று மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.