மீனவா்கள் பிரச்னை: மத்திய அமைச்சரிடம் எம். பி. மனு.!

54பார்த்தது
மீனவா்கள் பிரச்னை: மத்திய அமைச்சரிடம் எம். பி. மனு.!
இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரிடம் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி மனு அளித்தாா்.

தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து கைது செய்தும், படகுகளைப் பறிமுதல் செய்தும் வருகின்றனா். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன் பிடிக்கும் வகையில், உரிய தீா்வை ஏற்படுத்த வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், நம்புதாளை பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 56 போ் சமீப காலத்தில் கைது செய்யப்பட்டு, அவா்களது விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, மீனவா்களின் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

எனவே, படகுகளுடன் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுதில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி