ராமேசுவரத்தில் இருந்து மூன்று நாள்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவா்களுக்கு அதிகளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த மூன்று நாள்களாக ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை தடை நீக்கப்பட்ட நிலையில், 350- க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2, 500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க சென்றனா். இன்று காலையில் அதிகளவு மீன்களுடன் மீனவா்கள் கரை திரும்பினா்.
இதில் காரல்மீன் (சங்காயம்), இறால், நண்டு, கணவாய், பெரிய மீன்கள் அதிகளவு கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்