சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்களை சரிசெய்ய விவசாயிகள் கோரிகை

58பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விவசாய நிலங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களால் விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.


முதுகுளத்தூர் அருகே வெண்ணீர் வாய்க்காலில் இருந்து வெங்கலக்குறிச்சி செல்லும் சாலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக விறகு ஏற்றி வந்த லாரி வேகமாக சென்ற பொழுது மின்கம்பியில் உரசி சென்றதில் மின்கம்பிகள் அறுந்து
விழுந்ததோடு அல்லாமல் விவசாய நிலங்களில் இருந்த எட்டு மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தது.

இதனால் விவசாய நிலங்களில் மின் கம்பிகளும், மின்கம்பங்களும் சாய்ந்த நிலையில் கிடப்பதால் இப்பகுதியில் அப்பகுதி விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

அதோட அல்லாமல் கிருஷ்ணாபுரம், கீழப்பனையடியேந்தல் , கண்ணாபுரம், வெங்கலக் குறிச்சி, திருவாச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் இணைப்பு முறையாக இல்லாததாலும் மின்மோட்டார் இயக்க முடியாமலும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பொதுமக்களில் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சரி செய்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி