வெண்ணத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2016-17 ஆம் ஆண்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் 42 விவசாயிகளுக்கு இன்று வரை கடன் தள்ளுபடி செய்ததற்கான ஆதாரம் கொடுக்கவில்லை. இதனால் புதிய கடன் வாங்க முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி வைகை - கிருதுமால் - குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்