ராமநாதபுரம்: 09-10-23
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் லாந்தை ஊராட்சிக்கு உட்பட்ட. கருங்குளம், லாந்தை, கண்ணண்டை, அச்சங்குடி வன்னிக்குடி மற்றும் ஆர்எஸ் மங்கலம் தாலுகா திருவாடானை தாலுகா உள்ளிட்ட 30 க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயம் மக்கள் பயிர் காப்பீடு நிவாரணத் தொகை வழங்க கோரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோசம் எழுப்பினர். இதனால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பகுதி பரபரப்பு பதட்டமும் நிலவியது.
விவசாயிகள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெற்பயிர்கள் 90 காய்ந்து கருகி சாவி ஆகிப்போனது.
இதனால், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த நிலையில் விவசாயிகள் பெரும்பாலானோர் பயிர் காப்பீடு செய்திருந்தனர்.
ஆனால், அவர்களுக்கு இதுவரை பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்றும்
இந்த ஆண்டு சாகுபடி காலம் நெருங்கி விட்ட நிலையில் இதுவரை தங்களுக்கு கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
உடனடியாக தங்களுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களுடைய அடுத்தகட்ட
போராட்டம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.