தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தல்

57பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி வழியாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தல் சில நாட்களாவே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கை ராணுவ புலனாய்வு பிரிவுக்கு தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.

யாழ்ப்பாணம் மாவட்டம் கட்டைக்காடு பகுதி ஆழியவளை கடற்கரையில் புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரைப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த இரு மூடைகளை சோதனையிட்டதில் 85 கிலோ கஞ்சா இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கட்டைக்காடு போலீசாரிடம் ராணுவ புலனாய்வு பிரிவினர் ஒப்படைத்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சாவின் மதிப்பு இலங்கை மதிப்பில் ரூ. 30 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதேபோன்று, நேற்று முன் தினம் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட308 கிலோ கஞ்சா பொட்டலங்களை யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளை மூர்க்கன் கடற்கரையில் இலங்கை ராணுவபுலனாய்வுபிரிவினர் பைபர் படகுடன் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி