HMPV என்பது ஒரு சாதாரண வைரஸ் தான் என விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார். HMPV வைரஸை கொரோனா வைரஸோடு ஒன்றாக ஒப்பிட வேண்டாம். ரொம்ப காலமாக நாட்டில் இருக்கக்கூடிய ஒரு சாதாரண தொற்று என உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னாள் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.