ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை கோவிலுக்குள் சுற்றி திரிந்த நாய் ஒன்று கடித்ததில் காயமடைந்தார். பின்பு அவரது உறவினர்கள் நாயை விரட்டி காயமடைந்த அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தெருநாய்கள் கோவிலுக்குள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.