திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பணி தொடக்கம்.!

166பார்த்தது
திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பணி தொடக்கம்.!
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும், திமுக இளைஞரணி செயலரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் படி ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பணி இன்று நடந்தது. மண்டபம் மேற்கு ஒன்றியம் சாத்தான்குளம் கிராமத்தில் நடந்த உறுப்பினர் சேர்ப்பு பணியை மாவட்ட திமுக செயலர்  காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கே. சம்பத் ராஜா, துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் கே. ஜே. பிரவீன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி