ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் "வேர்களைத் தேடி" என்னும் பண்பாட்டு கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அயலகத் தமிழ் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் நித்யகல்யாணி, வட்டாட்சியர்கள் ஜபார் முஹமது, தமீம் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்