மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்

75பார்த்தது
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் வெள்ளரி ஓடையில் கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளரிஓடை ஊராட்சியில் 29. 03. 2025 இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று நீர் வளத்தை பாதுகாக்கவும் அதை பெருக்கவும் மக்களிடம் விழிப்புணர்வை எடுத்துரைத்தார். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார், அதனைத் தொடர்ந்து ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு அரசு வழிகாட்டுதல் படி உரையாற்றிய அவர் பயனளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஊட்டச்சத்து உரங்களை இலவசமாக வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் அருண்மொழி, வேளாண்மை துறை இணை இயக்குனர் மோகன்ராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பத்மநாதன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார் மற்றும் சோமசுந்தரம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி