ராமநாதபுரத்தில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி

64பார்த்தது
ராமநாதபுரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தபோது பெண் எஸ்ஐ. , மீது கைவைத்து தள்ளியதாக பாஜக அரசு தொடர்பு பிரிவின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் கூறியதாவது: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்புணர்வு தொடர்பான விவகாரத்தில் நீதி கோரி தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தல் படி, பாஜக மகளிரணி பேரணி சார்பில் மதுரை - சென்னை வரை நீதி யாத்திரை ஜன. 3ல் திட்டமிடப்பட்டிருந்தது. ராமநாதபுரத்தில் இருந்து யாத்திரைக்கு செல்ல முயன்ற மகளிரணி நிர்வாகிகளை போலீசார் மிரட்டி பணிய வைத்தனர். 

மேலும் மதுரை செல்ல முயன்ற மகளிரணி நிர்வாகிகளை வழியனுப்ப கேணிக்கரை பகுதியில் கூடிய மாவட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் அத்துமீறி கைது செய்து ஜன. 3 மாலை விடுவித்தனர். இதில் முதுகு தண்டுவடம் பாதித்த முன்னாள் ராணுவ வீரரும், பாஜக அரசு தொடர்பு பிரிவின் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், பெண் போலீஸ் எஸ்ஐ. , மீது கை வைத்து தள்ளிவிட்டதாகவும், அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், பாலியல் தொல்லை, இழிவுபடுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி