திருப்புல்லாணி விவசாயிகளுக்கு நெல் விதை விநியோகம்.!

65பார்த்தது
திருப்புல்லாணி விவசாயிகளுக்கு நெல் விதை விநியோகம்.!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் உழவுப் பணியில் விவசாயிகள் தீவிரமாக நெல் விதை பயிரிடும் பணியில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகளுக்கு நெல் விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றது.

எனவே திருப்புல்லாணி வேளாண் விரிவாக்க மையத்தின் கிடங்கில் போதுமான இருப்பு நெல் விதைகள் இருப்பதால் விவசாயிகள் பெற்று பயன்பெறுமாறு திருப்புல்லாணி வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மேலும் பயிர் சாகுபடியில், உயிர் உர விதை நேர்த்தி செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண்மை துறை அலுவலர்கள் பல்வேறு முகாம் மூலமாகவும் , விவசாயிகளிடம் நேரடியாக சென்று ஆலோசனை செய்து வருகின்றனர்.. நெல் சாகுபடியில் விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தவும், பயிர் வளர்வதற்கான வளிமண்டலத் தழைச் சத்தைக் கிரகித்து வழங்கவும் உயிரியல் விதை நேர்த்தி மற்றும் நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்து அதிக மகசூல் அடைந்திட விதை நோர்த்தி செய்யலாம் என்றும் இதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி