ராமநாதபுரத்தில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள் வினியோகம்.!

79பார்த்தது
ராமநாதபுரத்தில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள் வினியோகம்.!
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை ஒழிக்க வலியுறுத்தி, அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் எம். ஏ. முனியசாமி தலைமையில், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.


திமுக அரசுக்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் ராமநாதபுரம் அரண்மனையில் தொடங்கி சாலைத்தெரு, காசுக்கடை பஜார், ரோமன் சர்ச் பகுதி  வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி