ராமநாதபுரம் ராஜசிங்கமங்கலம் அருகில் உள்ள காவானூரில் மதுரைவீரன் சாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டை மேற்கொண்டு வாசித்ததில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி காலத்தைச் சேர்ந்த அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்தது.
நடப்பட்டிருந்த கல்வெட்டில் எழுத்து உள்ள பகுதி மட்டும் துண்டாக உடைந்து கிடக்கிறது. பின்பகுதியும் அதன் அருகிலேயே கிடக்கிறது. இக்கல்வெட்டில் ஒன்றரை அடி உயரத்தில் ஒரு அடி அகலத்தில் 16 வரிகள் இடம் பெற்றுள்ளன. முதல் இரண்டு வரிகளும் இறுதி வரியும் கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளன.
ஸ்வஸ்தி ஸ்ரீ என தொடங்கும் இக்கல்வெட்டில் 1851-வது ஆண்டு, விரோத கிருது வருஷம் தை மாதம் நான்காம் நாள் திங்கட்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் காவனூர் மதுரை வீரன் உள்ளிட்டவைக்கு உபயமாக சிலைகளை பிரதிஷ்டை செய்து சந்திரன் சூரியக்காலம் விளங்கும்படி, சூடியூர் அம்பலம் வைரான் காத்த பேரன் கனகு, பேத்தி மகமாயி சேமம் பெற்றபடி நயினார் கோயில் முத்துகாத்தபதி செல்வதாக என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு கழுமரம் போன்ற தூண்கள் இக்கோயிலில் மதுரை வீரனாக வணங்கப்பட்டாலும், ஒரே வடிவில் இரண்டு தூண்கள் நடப்பட்டு இரண்டின் கீழ் பகுதியில் மதுரைவீரன் சிற்பம் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
என குறிப்பிட்டுள்ளார்