தனுஷ்கோடி 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலினை நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில் இன்று 60 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தனுஷ்கோடியில் நடைபெற்றது. இதில் தனுஷ்கோடி மீனவர்கள் ஊர்வலமாக சென்று கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்தனர்.