சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிந்து நிற்கும் தனுஷ்கோடி

54பார்த்தது
குட்டி சிங்கப்பூர் என்ற பெயர் பெற்ற பகுதி தான் தனுஷ்கோடி. இப்படியான ஒரு 60 ஆண்டுகளுக்கு முன் இருந்த தனுஷ்கோடி, 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவு மன்னார் வளைகுடா கடலில் உருவாகிய புயலினால் ஆழிப்பேரலைகள் கோரத்தாண்டவமாடி ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கி சாந்தம் அடைந்தது.


இந்த நிலையில் இந்த புயலில் இருந்து தப்பிய தனுஷ்கோடியின் பூர்வகுடி மீனவர்கள் வேறு வழியின்றி வாழ்வாதாரம் காக்க ராமேஸ்வரம் பகுதியில் வாழத்தொடங்கினர். இதன்பின் புயலில் மிஞ்சிய இடமாக ஆங்கிலேயர் அமைத்த விநாயகர் கோவில், தேவாலயம், தபால் நிலையம், ரயில் நிலையம், சுங்க அலுவலகம் போன்றவை இருந்து வருகின்றன. 2017-ம் ஆண்டிற்கு பின் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டு பேருந்து வசதி மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்று வர அனுமதி அளித்தது.


இதன்பின் தினமும் நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றுவிட்டு தனுஷ்கோடியை பார்வையிட படையெடுத்து வரத்தொடங்கி சுற்றுலா ஸ்தலமாக மாற்றம் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக பழைய தனுஷ்கோடியாக புத்தயிர் பெற்று வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி