அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

71பார்த்தது
புரட்டாசி மாத சர்வ மஹாலியா அமாவாசை முன்னிட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று செல்லும் பக்தர்கள்*

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த நிலையில் புரட்டாசி மாதம் சர்வ மகாலியா அம்மாவாசை நாள்களில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து துதி கொடுத்தால் மோட்சம் என்ற ஐதீகம் உள்ளது

இந்த நிலையில் இன்று ஆவணி மாத சர்வ அமாவாசை முன்னிட்டு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் வந்திருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்து பிறந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர்

பின்னர் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி விட்டு சாமி மற்றும் அம்பாளை தரிசனம் பெற்று செல்கின்றனர்

மேலும் கூட்டு நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்றச் செயலும் ஈடுபடாமல் இருப்பதற்காக சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி