ராமேஸ்வரம் உள்ளூர் பொதுமக்கள், பக்தர்களை ராமநாதசுவாமி கோவில் தரிசனம் செய்ய வழக்கமான பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து வழக்கமான பாதையில் அனுமதிக்க கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிவன் வேடமணிந்து இன்று (ஜூன்-3) கோவில் அலுவலகம் முன்பு நூதன முறையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிந்தபின் கோவில் துணை ஆணையாளரிடம் மனு அளித்தனர்.