ராமநாதபுரத்தில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!

80பார்த்தது
ராமநாதபுரத்தில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரம்: பாலஸ்தீன எல்லையில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சபீர் தலைமை வகித்தார். செயலாளர் திஜாஜ்கான், பொருளாளர் கரீம் ஹக்சாஹிப், மாவட்டத் துணைத்தலைவர் யாசர் அராபத், மாவட்ட துணை செயலாளர்கள் உஸ்மான், மீரான், பரூக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநில செயலாளர் சபீர் அலி கண்டன உரையாற்றினார். பின் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி