பாம்பனில் தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் உலா: விபத்து அபாயம்!

81பார்த்தது
பாம்பனில் தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் உலா: விபத்து அபாயம்!
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

பாம்பன் ஊராட்சியில்20ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பலரும் கால்நடைகள் வளர்ப்பதால், அதனை முறையாக பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர்.

இதனால் மாடுகள் தெரு சாலை மற்றும் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் செல்பவர்கள் கால்நடைகளால் விபத்து சிக்கி காயம் அடைகின்றனர்.

இந்த மாடுகளை முறையாக பராமரித்து வளர்க்க இப்பகுதி மக்கள்பலமுறை கால்நடைகள்வளர்போரிடம் வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை.

இச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் சென்று வரும் நிலையில், உலா வரும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து, கால்நடைகளை முறையாக பராமரிக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி