மன்னாா் வளைகுடா, பாக்நீரிணை கடல் பகுதியில் 55 கி. மீ. வேகத்துடன் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமேசுவரம் மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அப்துல்காதா் ஜெய்லானி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய வானிலை மையம் அறிவுறுத்தலின்படி மன்னாா் வளைகுடா, பாக்நீரிணை கடல் பகுதியில் 45 முதல் 55 கி. மீ. வேகத்துடன் சூறைக் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மேலும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றாா் அவா்.