ராமநாதசுவாமி கோயிலில் ஜூன் 16-இல் ராமலிங்க பிரதிஷ்டை.!

75பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ராமாயணக் காலத்துடன் தொடா்டையது. இலங்கை மன்னன் ராவணனை ஸ்ரீராமா் வதம் செய்த பிறகு, பிரம்மஹத்தி தோஷத்தை போக்க அவா் ராமேசுவரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபாடு நடத்தியதும் தோஷம் நீங்கியது. இது ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு திருவிழா குறித்து கோயிலின் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் வெளியிட்டசெய்திக் குறிப்பு:

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகிற ஜூன் 14, 15, 16 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதில், 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் ராவண சம்ஹாரமும், 15- ஆம் தேதி பகல் 12. 30 மணிக்கு தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமா் கோயிலில் விபீஷணா் பட்டாபிஷேகமும் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 2. 30 மணிக்கு கோயில் நடை திறந்து அதிகாலை 3 மணி முதல் 3. 30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். இதைத் தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று சாயரட்சை பூஜை முடிந்ததும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படும்.

பிறகு மாலை 5 மணிக்கு மேல் கோயில் நடைதிறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். 16- ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீராமா் புறப்பாடாகி நண்பகல் 11. 30 மணிக்கு ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெறும் என்றாா் அவா்.

தொடர்புடைய செய்தி